சீன உர நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு டிசம்பர் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீன நிறுவனமான குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி மற்றும் மக்கள் வங்கிக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேதன பசளை இறக்குமதிக்காக குறித்த சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடனுக்கான கடிதத்தின் கீழ் மக்கள் வங்கியால் எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்கக் கூடாது என இந்த தடை உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.






