அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் தொற்றாளர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரான் தொற்றாளர் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அவர் நவம்பர் 23 ஆம் திகதி நைஜீரியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று காலை அறிவித்தது.

இதனையடுத்து, பரவலைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

சீன உர நிறுவனத்தின் இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு!

Leave a Reply