மின்சாரத் தடை தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம் – மின்சார சபை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக இலங்கை மின்சார சபையின் (CEB) பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க,தெரிவித்தார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரத்தை மீளப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் தொழிற்சங்கங்கள் தமக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மின்வெட்டு நாசகார நடவடிக்கையாகக் கூட இருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறினார்.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்றும், கூடிய விரைவில் மின்சாரத்தை மீட்டெடுப்பதே முன்னுரிமை எனவும் அவர் கூறினார்.

Leave a Reply