முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றில் இன்று காலை 11 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
சமையல் செய்துகொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், அருகில் யாரும் இருக்காததால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகிய முதலாவது சம்பவம் இது என்பதுடன் இந்த சம்பவம் முல்லைத்தீவு மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரத் தடை தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம்! மின்சார சபை (வீடியோ இணைப்பு)






