யாழில் இன்றைய தினம் வட மாகாண விவசாய அமைச்சுக்கு முன்னால், விவசாயிகளால் அரசாங்கத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டத்தினை ”தெற்கு அமைச்சர்களை வைத்து ஏழை விவசாயிகளின் காணிகளை மடு பெப்பி பாதரே பறிக்காதே, மன்னர் GA நந்தினி வடமாகாண காணி ஆணையாளர் சிபாரிசை அமுல்படுத்து, வட மாகாண காணி ஆணையாளர் விவசாயிகளுக்கு கொடுக்கச் சொன்னதை மடுக்கோயிலுக்கு வரும் அமைச்சர்களை வைத்து தடுக்காதே, மடு DS நிஜாகரன் மத பிரச்சனையை உருவாக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு நடாத்தியிருந்தனர்.

மேலும் விவசாயிகள் பலர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
1980 ஆம் ஆண்டிலிருந்து எமது முன்னோரால் கோவில்மோட்டை காணியில் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வருகிறது. இந்த காணியானது 45 வருடங்களுக்கு முன்னரே வனவளப்பு பகுதிக்குள் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் காணி மடு தேவாயலத்திற்கு சொந்தம் என்று கூறி, மடு ஆலய நிர்வாகம் தங்களுக்கு வேண்டும் என்றும் எங்களை வெளியேறுமாறும் கூறுகிறார்கள்.

இந்த காணிக்குரிய ஏக்கர் வரி, காப்புறுதி எங்களிடம் உள்ளது. நாங்கள் பூர்வீகமாக செய்து வந்த இந்த காணியை விட மாட்டோம். இதனை நாங்கள் தருமாறு டி.எஸ் இனைக் கேட்டிருந்தோம். இது யாருக்குமே உரிமை இல்லாத காணி, இதனை விவசாயிகளுக்கே கொடுக்க கூறப்பட்டிருந்தது.
இந்த காணியினை பெற்றுக்கொள்வதற்காக நிராஜன் என்பவரூடாக மடுத்தேவாலயத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இவர் விவசாயிகளின் கருத்துக்களை காதில் வேண்டுவதில்லை.

இம்முறை விவசாயம் செய்ய வரும் போது அவர்கள் அடாத்தனமாக 50 ஏக்கர் காணியையும் உழுதிருந்தார்கள். நாங்கள் இதனை மடுப் பொலிஸில் முறைப்பாடு செய்த போது அவர்கள் இதனை கவனத்தில் கொள்ளாது எங்களுக்கு எதிராக தான் வழக்கு தொடுத்திருந்தார்கள். வன்முறை மேற்கொண்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் காரியாலயம் ஆகியவற்றின் முன்பாகவும் போராட்டம் நடாத்தியிருக்கிறோம். பிரதேச செயலகரும், அரச அதிபரும் எங்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள், இதனை வெளிப்படுத்துவதற்கே இன்று இங்கு வந்திருக்கிறோம்.

எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் வரையில் இந்த இடத்தினை விட்டு நகரப்போவதாக இல்லை எங்கள் காணியினை விவசாய அமைச்சு பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். என்றனர்.

பிற செய்திகள்

