
இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் திடீரென முடங்கியுள்ளது.
அதனை பயன்படுத்த முடியவில்லை பயநர்கள் ருவிற்றர் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பில் இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள ருவிற்றர் செய்தியில்
முடக்கம் தொடர்பில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது. உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டுள்ளது.

