அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது மக்களை பயமுறுத்தம் நாடகம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அணைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, ஸ்ரீறி தம்ப தேரர் போன்றோர் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது மக்களை பயமுறுத்தும் நாடகம் பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி அவர்களுக்கு பிணை வழங்காது வைத்திய பரிசோதனை செய்வது, உறவினர்களை தவிர வேறு அமைப்பினரை அனுமதிக்காமல் இருப்பது, மக்களுக்கு அச்சம் காட்டும் அரசாங்கத்தின் வேலை.
இதற்கு மக்கள் ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. மாணவர்களை எந்த சட்டத்தினூடாக வெளியில் கொண்டுவர வேண்டும் என்று எமக்கு தெரியும் என்று ஆசிரிய சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.
நாளை கொழும்பு மருதனை எல். பின்ஸ்டன் மண்டபத்துக்கு முன்னால் அரகல, தொழில்சங்கம், மக்கள் அமைப்பு, மாணவ அமைப்புகளால் முன்னெடுக்கப்படவிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.
50நாட்களை கடந்து குறித்த மாணவர்கள் விடுதலை செய்யப்படவில்லை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, விலைவாசி உயருகிறது, மக்கள் பசி பட்டினியால் துன்பப்படுகிறார்கள் இதற்காகவா கோட்டபாய அரசாங்கத்திடம் இருந்து மக்கள் ரணிலிடம் அரசை கையளித்தார்கள். ரணில் மக்களோடு விளையாடுகின்றார். இதன் விளைவு நாளை ஆரம்பம் முடிவு இல்லை என்றால் முடிவு வேறு வடிவில் முடிவாகும் என்றார்.
பிற செய்திகள்

