ஆர்.பி.கோ கம்பனியின் கீழ் இயங்கும் சாமிமலை மல்லியப்பு மற்றும் டீசைட் இரு பிரிவுகளை சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் கடந்த 27ம் திகதி முதல் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய முகாமையாளரை இடமாற்றம் செய்ய கோரியே குறித்த தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த முகாமையாளர் தோட்டத்தில் காலடி வைத்த இரண்டு வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் தேயிலை நிலங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படாத நிலையில் நாடாக்கள் பட்டுள்ளது. இதனால் தேயிலை கொழுந்தனின் அளவு பாதிப்படைந்துள்ளது.
எமது முன்னோர்களால் நாட்டப்பட்ட மரங்களை வெட்டி தேயிலை தொழிற்சாலைக்கு விறகுக்காக பயன்படுத்தப்படுகிறது. தொழிலாளர்களின் சேம நல விடயங்கள் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதில் பல்வேறு தொழில் சுமைகளையும் அடாவடி தனத்தையும் எம்மீது பிரயோகித்து வருகிறார்.
கடந்த தீபாவளி முன்பணம் 15000/- ரூபாவை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து, மாதாந்த முன்பணத்தையும் முழுமையாக வழங்க மறுத்துவிட்டார். இது குறித்து கேள்வி எழுப்பிய தோட்ட தலைவர்கள் உள்பட நால்வர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து யாரேனும் கேள்வி கேட்டால் அவர்களை திட்டம் தீட்டி வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். எனவே நாம் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
இன்றைய தினம் இது குறித்து மஸ்கெலிய பெருந்தோட்ட நிறுவனத்தின் பணியாளர் மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இ.தொ.கா பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்று குறித்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இன்று 1ம் திகதி காலை 8 மணி முதல் தோட்ட தொழிலாளர்கள் காரியாலயத்தில் முன் ஒன்று கூடி முகாமையாளர் உடன் இந்த தோட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் அப்போது தான் நாங்கள் பணிக்கு செல்வதாக ஒன்று கூடி உள்ளனர்.
அத்துடன் இன்று ஹட்டன் தொழில் ஆணையாளர் நாயகம் முன்பாக இந்த விடயம் சம்பந்தமாக தொழிற் சங்கங்கள் முன் எடுத்து விசாரணை நடைபெற உள்ளது.
பிற செய்திகள்

