
இலங்கையில் பெண்களிடமும் உயிர்கொல்லி போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அழகுக் கலை நிலையங்கள் ஊடாகவே அவர்கள் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றனர் – இவ்வாறு தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடம் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் குளியாபிட்டியவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர்;
அதிகளவான பெண்களிடம் தற்போது உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
குறிப்பாக குருநாகல் மாவட்டத்திலேயே இந்த நிலை பதிவாகியுள்ளது. ஆண்களை விடவும் பெண்களுக்கே பாதிப்பு அதிகமாகவுள்ளது.
அழகுக் கலை நிலையங்களின் ஊடாக இந்தப் பழக்கத்துக்கு பெண்கள் அடிமையாகின்றனர். அடிக்கடி அழகுக் கலை நிலையங்களுக்குச் செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்து பெற்றோர் அவதானத்துடன் செயற்படவேண்டும் – என்றார்.

