
2009ஆம் ஆண்டு மே மாதம் இந்த நாட்டில் யுத்தம் முடிவடையாவிட்டால் சாணக்கியன் உட்பட பலர் இந்த நாட்டுக்குவந்திருக்கமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
இரட்டா பிரஜாவுரிமை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பதவிகள் பறிக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி டினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்:
மட்டக்களப்பில் அதிகளவில் ஆர்ப்பாட்டங்களை செய்தவர்கள் நாங்கள் தான். கிட்டத்தட்ட 42 ஆர்ப்பாட்டங்கள். அனேகமானோர் எம்மை கேலி செய்திருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்காளர்களில் எமக்கு வாக்களித்தவர்கள் 34,000 பேர். ஆனால் முழு பிரச்சினைகளையும் நாங்கள் தான் முடித்துக் கொடுக்க வேண்டும்.
பிரச்சனையை கூறுவது மாத்திரம் அல்ல பிரச்சனைக்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நாங்களும் வேலை செய்து கொண்டிருக்கின்றோம் .உத்தியோகத்தர்களும் வேலை ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் நாங்கள் பல தடவைகள் பேசியதினால் தான் ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்கள் நீதி அமைச்சர்களுடன் பலதடவைகள் பேசி ஒரே தடவையில் 16 தமிழரசியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
வெறுமனே உரிமை கோஷத்தை மாத்திரம் கோரி வெற்று அரசியல் கிழக்கு மானத்தில் தமிழர்களின் இல்லாமல் ஆக்கிவிடும்.
தற்பொழுது பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது. மிக விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் யார் இவர்கள் என்று.பசில் ராஜபக்ச முன்னாள் நிதி அமைச்சர் எட்டை பிரஜா உரிமை பெற்றதற்கு நிறைய பிரச்சினைகள் வந்தது.
அது எவராக இருந்தாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது சிங்கள பாராளுமன்ற உறுப்பினரோ இரட்டை பிரஜா உரிமை பெற்றுக் கொண்டு பாராளு உறுப்பினராக இருக்கிறவர்கள் யாரென கண்டுபிடித்து உடனடியாக பதவி துரத்தப்பட வேண்டும் என்றார்.
பிற செய்திகள்

