தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகளுக்கு அப்பால் சென்று நாட்டு நலன்கருதி அம்ப்பணிப்புடனான சேவையை வழங்க திடசங்கற்பம் கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.
இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் நலன் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான பயிற்சி செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு தற்போது முன்னொருபோதும் அற்ற பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்துள்ளது. உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயல்திட்டமொன்றை வடிவமைத்து செயற்படுத்தி வருகின்றது. கிராமிய மட்ட உற்பத்தியை மேம்படச்செய்து உள்நாட்டு உற்பத்தியை வலுசேர்க்க வேண்டும். இது குறித்து உரிய மக்கள் தரப்பினரை அறிவுறுத்தல் காலத்தின் தேவையாகும். அரச உத்தியோகத்தர்களாகிய நம் அனைவருக்கும் மாதாந்தம் வேதனம் கிடைக்கப்பெறுகின்றது.
ஆனால் எத்தனையோ மக்கள் அந்த வாய்ப்பற்றவர்களாக உள்ளனர். அம்மக்களின் சேவை வழங்குனரான நாம் எமக்கு வழங்கப்பட்ட கடமை பொறுப்புக்களுக்கும் அப்பால் சென்று மக்கள் சேவையை வழங்க திடசப்கற்பம் பூணுமாறு அரசாங்க அதிபர் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களிடம் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



பிற செய்திகள்

