எதிர்ப்பு பேரணிகளால் சுற்றுலாத்துறை மீண்டும் தடைப்டப்படலாம் – ஹரின் பெர்னாண்டோ

<!–

எதிர்ப்பு பேரணிகளால் சுற்றுலாத்துறை மீண்டும் தடைப்டப்படலாம் – ஹரின் பெர்னாண்டோ – Athavan News

சமகி ஜன பலவேகய (SJB) நாளை (புதன்கிழமை) எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது சுற்றுலாத்துறைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் அந்த குணங்கள் அவரால் காட்ட முடிந்திருந்தால் இன்று நாட்டின் ஜனாதிபதியாக அவர் இருந்திருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் சுற்றுலாத்துறை தற்போது வளர்ச்சியடைந்து வருவதாகவும் அதனை மீண்டும் தரைமட்டமாக்க வேண்டாம் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்தார்.


Leave a Reply