மன்னார் நீதிவான் நீதிமன்றில் சான்றுப்பொருள்களாகக் காணப்பட்ட 11.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான 570 கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் பரிந்துரையில் பள்ளிமுனை கடற்கரையில் இன்று பிற்பகல் கஞ்சா போதைப்பொருள் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.
மன்னார் நீதிமன்ற நீதிவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் அவரது அறிவித்தலில் பதிவாளர் திருமதி தர்சிகா தர்சனின் ஏற்பாட்டில் இவ்வாறு போதைப்பொருள் சான்றுப்பொருள்கள் அழிக்கப்பட்டன.
2017ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வழக்குகளின் கஞ்சா போதைப்பொருளே எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.
நிலுவையில் உள்ள வழக்குகளின் சான்றுப்பொருளாகக் காணப்படும் போதைப்பொருள்களின் மாதிரிகளை வைத்து மிகுதியை அழிக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு சுற்றறிக்கை மூலம் அறிவித்திருந்தது.






