மரக்கறி விலை அதிகரிப்பால் பலாக்காய்களை கொள்வனவு செய்யும் மக்கள்!

நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில், பொருளாதார சிக்கல் காரணமாக மக்கள் அநேகமானோர் பலாக்காய்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புஸ்ஸல்லாவ நகரில் இன்று பலாக்காய் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடித்து கொண்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்துள்ளது.

பலாக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட போதும் மக்கள் அதிகளவில் பலாக்காயை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply