சமையல் எரிவாயு எங்கள் வீட்டுக்கு வெளியிலேயே இருக்கின்றது! நாமல்

தமது வீட்டில் சமையல் எரிவாயு கொள்கலன் வீட்டுக்கு வெளியிலேயே வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் வீடுகளில் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், கிராமத்தில் வசித்த மக்கள் என்ற வகையில் ஆரம்பம் முதலே சமையல் எரிவாயு கொள்கலனை வீட்டுக்குள் எடுக்கவில்லை.

இதனால், தற்போது கூட எமது வீட்டுக்கு வெளியிலேயே எரிவாயு கொள்கலன் வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply