நுரைச்சோலை தவிர்ந்த ஏனைய மின் நிலையங்களினது மின் விநியோகம் வழமைக்கு!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தவிர்ந்த ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களினதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் விநியோகத்தை சரிசெய்ய குறைந்தது 2 நாட்களாவது தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 முதல் மின்விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில், மாலை 5.00 மணியளவில் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. விசேட அறிக்கையாளரிடம் மலையக அரசியல் அரங்கம் மனு கையளிப்பு!

Leave a Reply