வீடு வீடாகச் செல்லும் அரச அலுவலர்கள் – குவியும் பாராட்டு

முதியோர் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகளை, அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கிய கொடிகாமம் சமூர்த்தி வங்கி அலுவலர்களுக்கு அந்தப்பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

முதியோர் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு, அந்தந்த அஞ்சல் அலுவலகங்களில் இதுவரை காலமும் வழங்கப்பட்டது. கடந்த செப்ரெம்பர் மாதம் தொடக்கம் கொடுப்பனவுகள் அந்தந்தப் பிரிவு சமூர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கப்படும் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒக்டோபர் மாதம் தொடக்கம் கொடுப்பனவு சமூர்த்தி வங்கிகளில் வழங்கப்பட்டது. கொடுப்பனவை இதுவரை வங்கிக்கு வந்துபெற்றுக்கொள்ளாதவர்களுக்கு. சமூர்த்தி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கொடுப்பனவை வழங்கியுள்ளனர்.

வங்கி முகாமையாளர் மற்றும் சமூர்த்தி அலுவலர் ஆகியோரின் செயற்பாட்டுக்கு பாராட்டுத் தெரிவித்த மக்கள். ஏனைய வங்கிகளும் இவ்வாறான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply