மன்னாரில் பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவிக்கு மடிக்கணினி!

மன்னார் சென்சேவியர் பாடசாலையில் கணித பிரிவில் தோற்றி மாவட்ட மட்டத்தில் 8 வது இடத்தினை பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவான பற்றிக் ஆனந்தகுமார் மெற்றில் பியூலா என்ற மாணவிக்கு மடிக்கணிணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையினரால் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணிணியே மாணவிக்கு அவரது கல்வி செயற்பாட்டிற்காக இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட உபதலைவர் ராகவன், ஊடக இணைப்பாளர் இ.தயாபரன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் ம.யோகானந்தராசா ஆகியோர் இணைந்து மாணவியிடம் கணணியை வழங்கி வைத்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply