நாமல் குமார மீது பாலியல் குற்றச்சாட்டு

பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் ஊழல் எதிர்ப்பு முன்னணியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரக்காலபொல பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாமல்குமார தனது வீட்டில் வைத்து தன்னைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் எனவும் அதன்காரணமாக அவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து மேலும் நால்வருடன் சேர்ந்து  தாக்கினோம் என அந்தப் பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண் உட்பட ஐவரையும் பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply