மலையக மக்களுக்கு உதவ தமிழக முதலமைச்சர் முன் வரவேண்டும்

பெருந்தோட்ட மக்களின் அவல நிலையை போக்க தமிழ்நாட்டு முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1823ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த தமிழ் மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பாரிய பங்களிப்பை செலுத்தினர். இவ்வாறாா நிலையில் இம்மக்களில் சுமார் ஐந்து இலட்சம் பேர் 1965 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவின் நீலகிரி, வால்பாறை, குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அங்குள்ள தேயிலை தோட்டங்களில் தொழில் செய்து வாழ்ந்து வந்த நிலையில் அம்மக்களின் தேயிலை தோட்டங்கள் தற்போது காடுகளாாவும் மற்றும் ஏனைய தேவைகளுக்கும் எடுக்கப்பட்டதால் அம்மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தும் மிகவும் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான செளமியபவனில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கே.மாரிமுத்து, உப தலைவர் எஸ்.ராஜமணி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply