கிருலப்பனை பகுதியில் 19 வயது ஆசிரியை யைபாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் ஒரு வர்த்தகரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும் சந்தேக நபர் கிருலப்பனையிலுள்ள சித்தரத்த மாவத்தையில் வசிப்பவர். ஆசிரியையும் அதே வீதியில் வசிப்பவராவார்.
அத்தோடு ஆசிரியை தனது தாய் மற்றும் சகோதரருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஜூலை 31 இரவு, சந்தேக நபர் ஆசிரியையின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். ஆசிரியை சந்தேக நபரை நோக்கி தற்காப்புக்காக தாக்கவும் அவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார் என கூறப்படுகின்றது.
மேலும் இதன் பின்னர் அந்த வீட்டில் இருந்து சந்தேக நபரின் தொலைபேசியை பொலிசார் கண்டுபிடித்தனர். சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.