30 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவர் காயம்!

திருமண நிகழ்வுக்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ, வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவ – பலாங்கொட பிரதான வீதியில் கெம்பியன் பகுதியில் வைத்து விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஆட்டோ சாரதி, பெண் ஒருவரும், மற்றும் சிறுவர் ஆகியோரே காயமடைந்துள்ளதாகவும், இவர்கள் கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply