Today Rasi Palan 04th December 2021 | இன்றைய ராசிபலன்

Today Rasi Palan 04th December 2021 | இன்றைய ராசிபலன் : நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரி குறை கூறுவார். கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். கனவு நனவாகும் நாள்.

கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.

துலாம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் எளிதில் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.

தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply