எருக்கலம் பிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட 75 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு !

மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் முதல் கட்டமாக அமைக்கப்பட்ட 75 வீடுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

யுத்தத்திற்கு பின்னர் மீளக் குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டமானது பூரணத்துவம் அடையாத நிலையில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டன.

இதனை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளிகளுக்கு கையளித்தனர்.

தலா 13 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீடுகளை கையளித்து வைக்கும் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply