வர்த்தகர்களினால் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அது நிர்ணய விலைக்குட்பட்ட பொருளாக காணப்பட்டால் மாத்திரமே வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல இதனை தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானியை பிரசுரித்துள்ளது.
அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட பொருட்கள் வர்த்தகர்களினால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதனை ஆதாராத்துடன் முறைப்பாடு செய்தால், முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படும்.
உரிய முறைப்பாடு பரிசீலனை செய்யப்பட்டு வர்த்தகர் தவறிழைத்திருப்பாராயின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல தெரிவித்தார்.
நிர்ணய விலைக்கு உட்படாத பொருட்களின் விலை தொடர்பில் உற்பத்தியாளர்களே விலையை நிர்ணயிப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

