
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ரா உறுப்பினர் அனுகுமார திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில்:
நாட்டில் பல்வேறு பிரச்சினை காணப்படுகிறது.ஆனால் ஜனாதிபதி ரணில் மாலை தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.இது யாருடைய பணம்.தேர்தலை நடாத்த வேண்டும் என்று நாம் கூறி வருகின்றோம்.அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.மார்ச் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.அப்போது தெரியும் இந்த ரணிலுக்கு மக்கள் பலம் எவ்வாறு உள்ளது என்று.
பிணை முறி மோசடியில் ரணிலை சிறையில் தள்ளுவோம் என்று கூறியவர்கள்,இன்று ரணிலின் மடியில் புரண்டு எழுகின்றனர்.ஆகவே இந்த நிலை மாற வேண்டும் .மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.ஆனால் மக்களை நீங்கள் அடக்கப் பார்க்கிறீர்கள்,கைது செய்கிறீர்கள்.தவறு செய்யாமல் பல்கலைக் கழக மாணவர்களை தடுத்து வைத்துள்ளீர்கள்.இந்த கைதுக்கான கையெழுத்து வைக்கும் போது உணர்ச்சி அற்ற ஜடமாகவே அரசு மாறியுள்ளது.விறகுக் கட்டை தான் இன்று நாட்டை ஆட்சி செய்கிறது.சோமாலியத் திருடர்கள் கப்பலை பிடிப்பது போன்று ,நாட்டில் ஆட்சியை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்றார்.

