
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆடைகளை கல்வி அமைச்சு ஒருபோதும் மாற்றாது என கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேம்ஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பெண் ஆசிரியர்கள் தாம் பாடசாலைக்கு செல்லும் போது சாறி அணிவதில் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில்,அமைச்சர் இன்று நாடாளுமன்றில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.





