
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில்:
இன்று நான் சபையில் அவதானித்தேன் ,பாதிக்கப்பட்ட மக்கள்,ஒதுக்கப்பட்ட மக்கள்.பாவம் என்று மலையக மக்களை ஒதுக்கி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.நாங்கள் ஒதுங்கவில்லை.நீங்கள் தான் ஒதுக்கி வைத்தீர்கள்.
வெளிநாட்டில் இலங்கையர் ஒருவர் இறந்தால் ஒட்டுமொத்த நாடும் கண்ணீர் விடுகிறது.ஆனால் அண்மையில் மலையகத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர், இறந்தார்.அதே போன்று கடந்த வாரம் இருவர் இவ்வாறு உயிரிழந்தனர்.இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
நாம் பாவம் இல்லை.நீங்கள் தான் ஒதுக்கி கொண்டு இருக்கிறீர்கள்.நாம் மலையகத்தில் மட்டும் வாழவில்லை.நாடு முழுவதும் வாழ்கின்றோம்.எம்மில் பலர் மருத்துவர்களாக ,பொறியியலாளர்களாக ,உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.மலையக பிள்ளைகள் பாடசாலை செல்வதை குறைத்துள்ளனர் என்று கூறினீர்கள்.சுமார் 728 பாடசாலைகள் அடிப்படை வசதி இல்லாமல்,கூரை கூட இல்லாமல் இருக்கின்றன.எப்படி அங்கே சென்று படிப்பது என்றார்.





