பொலித்தீன் பையைப் பார்த்துப் அதிர்ச்சி அடைந்த பொலிஸார்

 ஐஸ் போதைப்பொருளை  விநியோகித்து வந்த  சந்தேக நபரை   கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த  இரகசியத்  தகவல் ஒன்றினை அடுத்து நேற்று இரவு , கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சிங்கள மகா வித்தியாலய  வீதியில்   வைத்து   சந்தேக நபர்    விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர்  கல்முனை குடி 13  பகுதியை  சேர்ந்த  27 வயது  மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 2 கிராம் 50 மில்லிகிராம்  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்களுடன் கல்முனை   பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply