நான் பள்ளியில் படிக்கும் போது இப்பிடிதான் இருந்தேன்- சபையில் பாடமெடுத்த விமல்!

சிறுவயதில் பாடசாலைக்கு செல்லும் போது ஒரு காற்சாட்டையும் ஒரு சட்டையும் மாத்திரமே இருந்தாகவும் அதனை சலவை செய்து தினமும் அணிந்து சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் நடைபெற்ற  நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை ஆசிரியர் தொழில் என்பது வேறு அரச வேலைகளை விட வித்தியாசமான தொழில்.ஆசிரியர்களையே மாணவர்கள் பின்பற்றுவார்கள் என்பதுடன் முன்னுதாரணமாக எடுப்பார்கள்.

இதனால், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் வெளி தோற்றம் அரசின் வேறு தொழில்களை செய்வோரின் வெளித்தோற்றமும் வித்தியாசமானது.

அரசசார்பற்ற நிறுவனங்களின் அடிவருடிகள் காலத்திற்கு காலம் ஒவ்வொரு யோசனைகளை கொண்டு வருகின்றனர்.

மாணவர்களின் சீருடையை கழற்றுங்கள் என்று உடனடியாக கூற முடியாது என்பதால் ஆசிரியர்களின் உடையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். போலியான அனுதாபத்தை உருவாக்கி இதனை செய்ய வேண்டாம் எனவும் அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply