நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பில் சஜித் தரப்புக்கு வந்த சந்தேகம்!

செயற்கையாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த குற்றசாட்டை முன்வைத்தார்.

கேள்விகளை தயாரிப்பது ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகத்தில் இருக்கும் சம்பளத்தை பெற்று கேள்விகளை எழுதும் நபர் எனவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  இந்த விடயம் தெரியாது எனவும் அவர் கூறினார்.

அவ்வாறு எழுதப்படும் கேள்விகள் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படுகின்றன.இதனால், வேறு நாட்களின் கேள்விகள் கேட்க இடமளிக்க வேண்டாம் எனவும் அது சூழ்ச்சிகரமாக செய்யும் விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுக்கு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான  அமைச்சர் பிரசன்ன ரணது்ஙக பதிலளித்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் அமளியான நிலைமை ஏற்பட்டது.

Leave a Reply