கொழும்பு,நவ 08
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விவகாரம் குறித்து இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வுட் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தனுஷ்க குணதிலக்க குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு முன்னிலையில் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வுட் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அத்துடன் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தற்போது குறித்த குழு முன் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





