நுகேகொட – மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்தில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சம்பவம் நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். காஸ் கசிவு குறித்து அந்நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டிற்கு புதிய காஸ் சிலிண்டரை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரி – விமல் – கம்மன்பில இன்றி ஆளுங்கட்சி பங்காளிகள் முக்கிய கூட்டம்!






