ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று: பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சிட்னியில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் இதுவரை சர்வதேச கிரிக்கட் பேரவையின் உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் 6 போட்டிகளில் பங்கேற்றுள்ளன.

இதில் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply