இலங்கையில் பேருந்து நிலையம் ஒன்றில் தேன் வடிகிறது – ஆச்சரியத்தில் மக்கள் (படங்கள் இணைப்பு)

தலவாக்கலை பேருந்து  நிலைய கட்டடத்தில் தேனீக்களின் கூடு  கட்டப்பட்டுள்ளதால் பயணிகள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
 
 கட்டடத்தில் பல இடங்களில் பெரிய பெரிய தேனீ  கூடுகள் காணப்படுகின்றன. இந்தக்  கூடுகளை சுற்றி காகங்கள் மற்றும் புறாக்கள் சுற்றித்திரிவதால் அந்த பறவைகள்   கூடுகளை கலைத்தால்  பேருந்து  நிலையம் மற்றும் அதனை அண்மித்து காணப்படும் கடைகளுக்கு வந்துபோகும் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமானோர் ஆபத்தை எதிர் நோக்க நேரிடும்.

 மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தேனீ கூடுகளை விரைவில் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply