எதிர்க்கட்சியில் இருந்து 13 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்!

<!–

எதிர்க்கட்சியில் இருந்து 13 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்! – Athavan News

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இணையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply