303 இலங்கையர்கள் உடுப்பு துவைத்து, இன்று குளித்தனர் -பாணும் சாப்பிட்டு ,சிகெரெட்டும் புகைத்தனர் (படங்கள் இணைப்பு)

மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என வியட்நாம் ஊடகம் தெரிவித்துள்ளது
அவர்கள் பதற்றமற்றவர்களாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

அவர்களிற்கான தங்குமிடம் உணவு போன்றவற்றை அரசாங்கம் மிகவும் கௌரவமான விதத்தில் ஏற்பாடு செய்துள்ளது. சிலர் சிகரெட் கூட வாங்கினார்கள்.

இன்று அதிகாலை சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் இலங்கையர்களை சென்று பார்த்ததுடன் அவர்களிற்கு உதவுவதற்கு வியட்நாம் அரசாங்கமும் அதிகாரிகளும் அனைத்தையும் செய்வார்கள் என உறுதியளித்தார்.

தாங்கள் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ள இலங்கையர்கள் அரிசி மற்றும் பாண் ஆகிய உணவுகளை குறிப்பிட்டு அவை மிகவும் ருசியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply