தேயிலைச் செடியை வெட்டி விறகாக பயன்படுத்தும் தோட்ட நிர்வாகம் – இலங்கையில் அவலும்

மஸ்கெலிய பெருந்தோட்ட கம்பனிக்கு உற்ப்பட்ட சாமிமலை, மல்லியப்பு ஆகிய இரண்டு பிரிவுகளை கொண்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த  ஒக்டோபர் 17 ம் திகதி முதல் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய முகாமையாளரை இடமாற்றம் செய்யக்கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

குறித்த முகாமையாளரால் தாம் தொடர்ச்சியாக பழி  வாங்கப்பட்டு வருவதாகவும் ,ஆயிரம் ரூபாய் சம்பள  விடயத்தில் பல்வேறு தொழில் சுமைகளையும் ,அடாவடி தனத்தையும் தம்மீது பிரயோகித்து வருவதாகவும்  இது குறித்து கேள்வி எழுப்பும் தொழிலாளர்கள் குறித்த முகாமையாளரால் பழி  வாங்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த முகாமையாளர் காலடி வைத்த நாள் முதல் இன்று வரை  நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தோட்ட த்திலுள்ள தேயிலை நிலங்கள்  முறையாக பராமரிப்பின்றி காடாக்கப்பட்டு அட்டைகளும் குளவிகளும் பெருக்கெடுத்துள்ளது.

   எமது முன்னோர்களால் நாட்டப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு தேயிலை தொழிற்சாலைக்கு விறகுக்காக.பயன்படுத்தப்படகிறது.மேலும் எமக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சேம நல விடயங்கள் குறித்த முகாமையாளரால்  நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளி முற்கொடுப்பணவு எமக்கு முழுமையாக வழங்கப்படவில்லை .   எனவே நாம் இந்த தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தள்ளோம்.என குறித்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply