போதைப் பொருள் பாவனை தடுப்பு விழிப்புணர்வு!

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலுக்கமைய கி/சிராஜ்நகர் முஸ்லிம் மகா வித்தியாலயம் உயர்தர மாணவர்களுக்கான போதைப்பொருள் பாவனைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு இன்று(2022.11.09) சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன் அவர்களால் பாடசாலை மண்டபத்தில் வைத்து இடம் பெற்றது.

இவ் விழிப்புணர்வு நிகழ்வில் மாணவர்களுக்கு போதைப்பொருள் பாவனையிலிருந்து மீண்டெழுதலுக்கான தந்துரோபாயமுறையினை உளவளதுணை உத்தியோகத்தர் திருமதி. கொன்சலீன் மாவளன் அவர்களால் விளக்கமளிக்காப்பட்டதுடன்  மாணவர்களுக்கான சத்திய பிரமாணம் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தரால் செய்து கொள்ளப்பட்டது.

Leave a Reply