இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின், இரண்டாம் அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
அடிலெய்டியில் நடைபெறும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச தீர்மானித்துள்ளது.
முன்னதாக, நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் நியூஸிலாந்தை வெற்றிகொண்ட பாகிஸ்தான், முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்த நிலையில், இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும் மற்றையை அணியை தீர்மானிக்கும் போட்டி இன்றைய தினம் நடைபெறுகிறது.
இறுதியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளில் இந்தியா 4 போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.