அண்மைக்காலமாக வடமராட்சி பகுதிகளில் ஒதுங்கிவரும் சடலங்கள் குறித்த மர்மத்தை அரசாங்கம் தான் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டுமென தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் தெரிவித்தார்.
இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகைக்கு எதிராக யாழில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அண்மைக் காலமாகவே யாழ்ப்பாண வடமாகாண பகுதிகளில் அடையாளங் காணப்படாத சடலங்கள் தொடந்த்தும் கரையொதுங்கி வருகின்றன.
நேற்று மட்டும் ஆறு சடலங்கள் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலங்கள் மீட்கப்படுவதற்கு பின்னால் உள்ள சதித்திட்டம் என்ன? இவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது இயற்கை மரணமா என கேள்விகளை எழுப்பியுள்ளார்.
குறிப்பாக வடமராட்சியிலேயே இவ்வாறான சடலங்கள் கரையொதுங்குவதற்குரிய மர்மம் என்ன?
இதற்கான உண்மையை அரசாங்கம் தான் தேடி கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென மேலும் அவர் தெரிவித்துள்ளார்..






