மோசடியைத் தட்டிக் கேட்டவர் மீது வாள்வெட்டு! யாழில் சம்பவம்!

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட குறித்த வாள்வெட்டுத் தாக்குதலில் 42 வயதான நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆலயமொன்றில் இடம்பெற்றுவரும் நிர்வாக மோசடிகள் தொடர்பில் அண்மையில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து முறைப்பாடு
வழங்கிய நபர் மீதே இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *