
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாயொருவர் பலியாகியுள்ளார்.
ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த தாயொருவரைப் பின்னிருந்து வந்த சாரதி பயிற்சி வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.
விபத்தில் உயிரிழந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த முகமது நாசிம் யோகலட்சுமி வயது (69) 4 பிள்ளைகளின் தாய் என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
[embedded content]