
யாழ் கோப்பாய் பிரதான வீதியில் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர சிலதினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.