யாழ் துணை தூதரகத்தில் அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் யாழிலுள்ள இன்று மதியம் இந்திய துணைத்தூதுவர் சிறீ ராகேஷ் நட்ராஜ் அவர்களிடம் கையளித்து கலந்துரையாடியிருந்தனர்.
வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது கடந்த ஆவணி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையிலான 100 நாள் செயலமர்வினை மேற்கொண்டிருந்தது.இந்த 100 நாள் செயலமர்வு கடந்த நவம்பர் 8 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இன்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணைத்தூதுவரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.





