யாழில் சுடச் சுடச் சாராயம் காய்ச்சிய 20 வயது இளைஞன் – வசமாக பொலிசாரிடம் சிக்கினார்

யாழ்ப்பாணத்தில் சாராயம் காய்ச்சிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு  பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, வாதரவத்தை பெரிய பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  3 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது 20வயதுடைய  சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காங்கேசன் துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர்  மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply