யாழில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்றும் சிரமதானப்பணிகள் முன்னெடுப்பு

கார்த்திகை 27 நினைவேந்தல்களுக்காக தமிழர் பிரதேசங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் மக்களால் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு பிரிவினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் ,இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக,மக்கள் தயாராகி வருகின்றனர்.


இந்த நிலையில் ,கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன் போது புலனாய்வுப் பிரிவின் கெடுபிடிகள் காணப்பட்டதாக துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply