
சர்வதேச ஒத்துழைப்புக்கான ரஷ்ய சங்கத்தின் பணிப்பாளர் சபையின் பிரதித் தலைவர் Polozkov Vladimir மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவுகள் குறித்தும் இலங்கையில் செய்யக்கூடிய பாரிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதுடன், கைத்தொழில், துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் ரமேஷ் பத்திரன, மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜனித லியனகே, மொஸ்கோவில் உள்ள பல முன்னணி அபிவிருத்தி நிறுவனங்களின் பணிப்பாளர் சபையின் தலைவர் Ryzhkov Petr மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.





