அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த ஹங்வெல்லயில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் 1,020,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டதற்கு எதிராக விதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாக இந்த அபராதத் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.