யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்புப் பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று இன்றைய தினம் கரையொதுங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகளுக்கு மக்களால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அரச அதிகாரிகளும் பொலிஸாரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மீனில் காயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.